
விதியோடு வந்த சொந்தம்
5
230
SERIES•
CompletedIthayamozhi championship 2026#TamilNovel #TamilStory #FamilyRomance #LoveStory #FamilyStory #VillageLife #CityLife #Marriage #TamilRomance #IlakiyaJayasree
About
ஒரே நாளில்… இரண்டு பெண்களின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.
நகரத்தை மட்டுமே அறிந்தவள் கிராமத்து வீட்டு மருமகளாகிறாள். மண் வாசத்தோடு வளர்ந்தவள் நகரத்து வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறாள்.
விரும்பித் தேர்ந்தெடுத்த திருமணங்கள் அல்ல… எதிர்பாராத சூழ்நிலையில் விதி போட்ட இரண்டு முடிச்சுகள்.
பழக்கமில்லாத வாழ்க்கை… புரியாத உறவுகள்… எதிர்பாராமல் மலரும் நேசம்…
விதி சேர்த்த இந்த நான்கு இதயங்களும் ஒருநாள் உண்மையாகவே ஒருவருக்கொருவர் சொந்தமாகுமா?
❤️ விதியோடு வந்த சொந்தம்
❤️ கல்யாண வீடுன்னாலே சத்தமும் சிரிப்பும் இல்லாம இருக்குமா என்ன? அதுவும் வசதியான வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம். அதிகாலை ஐந்து மணிக்கே அந்த மண்டபம் முழுக்க ஆட்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. வாசலில் கட்டியிருந்த வாழைமரத்திலிருந்து மேடையைச் சுற்றி தொங்கவிட்டிருந்த மல்லிகைப்பூ வரை எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்தின் ஒரு பக்கம் சமையல்காரர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் உறவுக்காரப் பெண்கள் பட்டுப்புடவையைச் சரி செய்துகொண்டும் நகையைப் பற்றிப்...
Loading...
Enjoyed this?
Sign in to clap