
நிஜமோ நிழலோ
About
கல்யாணம் நிச்சயமானது ஒருத்திக்கு. மணமேடையில் அமர்ந்தது வேறொருத்தி.
பத்திரிகை அடிக்கப்பட்டது. பந்தக்கால் நடப்பட்டது. மண்டபம் முழுக்க அவள் புகைப்படம்.
மணமேடையில் அமர்ந்தவள் — வேறொருத்தி.
அதே முகம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு இது எதுவும் ஞாபகத்தில் இல்லை.
மேளம் முழங்குகிறது. தாலி கட்டப்படுகிறது.
"என் உடம்புக்குள்ள இன்னொருத்தி இருந்தா."
அவளுடைய ஒரே தோழி.
இறந்தவள் ஒரு திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, மணமேடைக்கு முன்பே கிளம்பிவிட்டாள்.
மிச்சம் இருக்கும் வாழ்க்கையை வாழ வேண்டியவள் யார்?.
நிஜமோ நிழலோ
© 2023 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
நிஜமோ நிழலோ
1
பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அது ஒரு சரியான பொட்டல் காடு. வி.வி. கன்ஸ்டரங்ஷன்ஸ்தான் ‘வசந்தம் காலனி’ என்ற ஒரு மிகப் பெரிய ப்ரொஜெக்ட்டை அங்கே கொண்டு வந்தது.
சென்னைக்கு மிக அருகாமையில்… அதாவது ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில்… அந்தப் பொட்டல் காட்டைப் பொட்டியாகக் கட்டம் கட்டி விற்று வைத்தது. விவசாய நிலத்தில் தொடங்கி சதுப
...Enjoyed this?
Sign in to clap