
வல்லவா என்னை வெல்லவா 🌸🖤
About
வல்லவா… என்னை வெல்லவா? ❤️🔥🌸
காதல் என்றால் என்னவென்று கூட அறியாதவள் அவள்…
காதல் என்ற வார்த்தையை கேட்டாலே சிரித்துவிட்டு கடந்து செல்பவன் அவன்…
ஒருத்திக்கு காதல் ஒரு கனவு.
ஒருவனுக்கு காதல் ஒரு விளையாட்டு.
ஆனால்…
இருவரும் சந்தித்த அந்த ஒரு நொடி முதல்,
அவனுடைய விளையாட்டு… அவளுடைய காதலாக மாறியது.
வல்லவா… என்னை வெல்லவா? 🌸🖤
பெங்களூரு…
காலை நேரத்து குளிரையும், பரபரப்பான சாலைகளையும், உயரமான கட்டிடங்களையும் தாண்டி… அந்த நகரம் எப்போதும் ஏதோ ஒரு புதிய கதையை எழுதிக்கொண்டே இருக்கும்.
அந்த நகரத்தில்தான்…
ஒரு பக்கம் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் நடுவே வாழும் ஒரு குடும்பம்…
இன்னொரு பக்கம் சின்ன சின்ன ஆசைகளோடு, அன்பை மட்டுமே சொத்தாக வைத்திருக்கும் ஒரு குடும்பம்…
இரண்டு உலகங்கள்.
அந்த இரண்டு உலகங்களையும் இணைக்கப் போவது…
காதல்..
பெங்களூருவின் முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது Vallavan Group of Companies.
பல வருடங்கள
...Enjoyed this?
Sign in to clap