
மௌனங்களின் மொழி
0
0
SERIES•
Ongoing
About
மௌனங்களின் முன்னை 🖤
வார்த்தைகளால் சொல்லப்படாத
சில உணர்வுகளுக்கும்…
மௌனத்தில் மறைக்கப்பட்ட
சில உண்மைகளுக்கும்…
ஒருநாள் குரல் கிடைத்தால்?
அதிகாரம் சூழ்ந்த அரசியல் உலகில்,
தந்தையின் மரணத்திற்குப் பிறகு
தன் விதியை ஏற்க வேண்டியவன் அவன்…
தன் கடந்த காலத்தைத் தேடியபடி,
தொழில்நுட்ப உலகில் தன்னைத் தொலைத்தவள் அவள்…
ஒருவனின் மௌனமும்,
ஒருத்தியின் மர்மமும்
சந்திக்கும் அந்த நொடியிலிருந்து…
சில மௌனங்கள் காதலாகும்…
சில மௌனங்கள் உண்மையைச் சொல்லும்…
சில மௌனங்கள்… உயிரையே மாற்றும். 🤍✨
**அத்தியாயம் 1: அதிகாரத்தின் நிழல்** தலைமைச் செயலகத்தின் நீண்ட தாழ்வாரங்களில் எப்போதும் ஒரு பதற்றம் நிலவும். ஃபைல்களின் சலசலப்பு, அதிகாரிகளின் விரைந்த நடைகள், தொலைபேசிகளின் இடைவிடாத சிணுங்கல்கள் எனத் தமிழ்நாட்டின் ஆட்சி பீடம் நிமிடத்திற்கு நிமிடம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், அந்த மூன்றாம் மாடி மாநாட்டு அறைக்குள் நுழைந்த எவரும் ஒரு கணம் மூச்சை அடக்கிக் கொள்வார்கள். அங்கே நிலவியது அரசியல் உலகத்திற்கே முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைதி; அந்த அமைதிக்குச் சொந்தக்காரன்—பிரஜன் தேவ் கண்ணன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap