
செந்தூரா
34
113
SERIES•
Ongoing#tamilnovel#senthoora#family#spiritualstory#muruganmystery#culture#familynovel
About
முருகப்பெருமானை மையமாக வைத்து நமது கலாச்சாரத்தின் தொன்மையையும் மேன்மையையும் எடுத்துரைக்கும் விதம் எழுதப்பட்ட ஆன்மீக கதை.... முருகரை நம்பும் வம்சமான நாயகன் குடும்பத்தில் முருகனின் அம்சத்தைக் கொண்டு பிறப்பெடுக்கும் நாயகன் விசாகமித்ரன்.... முருகரை நம்பியவர்க்கு யாவுமாக முருகர் உடனிருப்பான் என்பதை உணர்த்திடும் நாயகி அமிர்தா கதாபாத்திரம்... முருகரை நம்பியவருக்கு கெடுதல் நினைத்த சூரஜித்.. அவனது பணம் அதிகார மாயை அழிந்து ஆணவம் தகர்ந்தது எப்படி...? நாயகனின் தேடல் என்ன...? அதில் நாயகியின் பங்கென்ன...?
அத்தியாயம் 1 துதிக்கும் அடியவர்க் கொருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்கோர் துணை ஆகும்.. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனதுளத்தில் உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.... வேல் மாறல் பாடல் வரிகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது..... "அம்மா.... இப்போ திடீர்னு இந்தியா போகணும்னு சொன்னா என்ன அர்த்தம்.....?" கோபத்தோடு கேட்ட அவனுக்கு இன்று இருபத்தி ஏழாவது பிறந்தநாள்..... ஆறடி உயரத்தில் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுக் கோப்பாக வைத்திருந்த தேகத்துடன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap