
முரண் கடந்த கரிசல் காதல்
20
11
SERIES•
Ongoing#Love story#Family#Vanjam#பகை#துரோகம்
About
அவள் மேல் காதல் இல்லை…
அவள் குடும்பத்தின் மேல் இருந்த தீராத கோபம் மட்டுமே இருந்தது அவனிடம்.
அந்த கோபத்துக்காகவே அவளைத் திருமணம் செய்துகொள்கிறான்.
அவனுடைய நோக்கம் ஒன்று மட்டுமே — அவள் மூலம் அந்தக் குடும்பத்தை பழிவாங்குவது.
ஆனால், அவனுக்கே தெரியாமல் அவன் மனதில் மாற்றம் வர ஆரம்பிக்கிறது…
பழிவாங்க நினைத்தவளையே உயிராக நேசிக்கத் தொடங்கிய பிறகு,
அவன் நம்பிய பழியின் பின்னால் இருக்கும் உண்மை என்ன?
பழியோடு தொடங்கிய இந்த உறவு… காதலாக முடியுமா?
கிழக்கே வெளுத்துக்கொண்டிருந்த வானத்திலிருந்து சிந்திய மெல்லிய ஒளிக்கீற்று, கரிசல்குடியின் மீது ஓர் அமைதியான திரைபோலப் படர்ந்தது. ஊர் தெய்வமான மாரியம்மன் கோவில் மணியோசை, அதிகாலைக் காற்றின் ஊடே மிதந்துவந்து அன்றைய தினத்தின் முதல் மூச்சாகக் கலந்தது. அதைத் தொடர்ந்து, கிணற்றடியில் நீர் மொண்டு செல்லும் பெண்களின் கைகளில் குலுங்கும் வளையல் ஓசையும், பள்ளிக்கு ஓடும் சிறுவர்களின் கூச்சலும் மெல்ல அந்த கிராமத்திற்கு உயிரூட்டின. பனி இன்னும் பூரணமாக விலகியிருக்கவில்லை; தென்னங்கீற்றுகளின் இடுக்க வழியே புகுந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap