
திகழவனின் திங்கள் இவளோ?
0
0
SERIES•
Ongoing
About
திகழ்வேந்தனின் திங்களாக நிறைவாளா இந்த திருநிறைச்செல்வி என கதையின் வழி காண்போம். திருமணத்திற்கு பின் மலரும் ஒரு அழகிய காதல் கதை.
அத்தியாயம் 1
அந்த வீடெங்கும் உறவுகள் குழுமியிருந்தது. ஆனால் அதன் காரணம் அத்தனை மகிழ்ச்சியான தருணமாக இல்லை.
அவர்கள் ஊரின் பெரிய வீடு என போற்றப்படும் வீட்டவர் திகம்பரம் ஐயாவின் உடல்நிலை குறித்த கவலையே அவர்கள் அனைவரையும் சூழ்ந்திருந்தது.
"ஐயா பேரன் வந்துட்டாரா?" துண்டால் வாயை பொத்திக் கொண்டு ஒருவர் இன்னொருவரிடம் கேட்க.
"தகவல் சொல்லி இருக்காங்களாம். ஃபிளைட்டில் புறப்பட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டாக. வந்துடுவாரா இருக்கும்..." என்றார் இன்னொருவர்.
"இந்த பெரியவர் உயிர் என்ன பேரனை பார்க்காம போக மாட
...Loading...
Enjoyed this?
Sign in to clap