
மௌன ராகங்கள் பேசுதே
0
1
SERIES•
Ongoing
About
மௌன ராகங்கள் பேசுதே ♡
எழுத்து – யாழ்வி
முடிந்துவிட்டதாய் நினைத்த சில அத்தியாயங்களை, காலம் மீண்டும் எழுதத் தொடங்கினால்...?
தனிமையே தன் வாழ்வென தீர்மானித்த ஒருவன்...
தன் உலகமே தன் மகளென வாழும் ஒருத்தி...
இருவரின் பாதைகளும் எதிர்பாராமல் சந்திக்கும் தருணத்தில், விதி எழுதக் காத்திருப்பது உறவா? இல்லை விடை தெரியாத புதிரா?
அவர்களின் வாழ்வில் குட்டித் தேவதையாய் தியா!
சொல்லப்படாத உணர்வுகளும், அறியப்படாத ரகசியங்களும் ஒருநாள் மொழிபெறுமா?
மௌனங்கள் இசையாகும் தருணத்தில்...
மௌன ராகங்கள் பேசுதே... ♡
மௌன ராகங்கள் பேசுதே அத்தியாயம் 1: ஆர்ப்பரிக்கும் அலைவரிசை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் அன்று வெறும் கிரிக்கெட் மைதானமாக மட்டும் காட்சியளிக்கவில்லை. மஞ்சள் நிறக் கடலெனத் திரண்டிருந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதத் தலைகள், தங்களின் கண்களை ஆடுகளத்தின் மீது பதிப்பதற்குப் பதிலாக, மைதானத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பிரத்யேக மேடையின் மீதே நிலைநிறுத்தியிருந்தன. விசில் சத்தமும், மேள தாளங்களின் அதிரும் ஓசையும் சென்னையின் அந்திமாலையை உலுக்கிக் கொண்டிருந்தது....
Loading...
Enjoyed this?
Sign in to clap