
மயங்கினேன் தயங்கினேன்
About
பெற்ற தகப்பனின் சூழ்ச்சியால் ஒரு கொடுங்கோலனுக்கு வாழ்க்கைப்பட்டு சித்ரவதை அனுபவிக்கிறாள் ஹனீஷா. அந்த நரகத்திலிருந்து எப்படியோ தப்பித்து தற்கொலை செய்துக்கொள்ளும் முயற்சியில் பிரணவ் என்கிற டாக்டரால் காப்பாற்றப்படுகிறாள். இதற்கு நடுவில் அவளின் கணவன் அவளை வலை போட்டு தேடுகிறான். ஹனீஷா அவனுக்கு கிடைத்தாளா? ஹனீஷாவின் தந்தை என்ன செய்தார், பிரணவ் அவளுக்கு எந்த வகையில் உதவினான் என்பதே மீதி கதை....
மயங்கினேன்...தயங்கினேன்...
அத்தியாயம் -1
ஏற்காடு...
தன்னை மறந்து நடந்துக்கொண்டிருந்தாள் ஹனிஷா. தான் எங்கே போகிறோம், அடுத்து என்ன செய்ய போகிறோம். தன்னுடைய அடையாளம் தான் என்ன? தான் யாரென்று எதுவும் அவளுக்கு புரியவில்லை. மனம் காற்றை கிழித்துக்கொண்டு பறந்துக்கொண்டிருந்தது இலக்கில்லாமல். கால்களோ சேனை கட்டிய குதிரை கணக்காய் எங்கேயோ அழைத்துச் சென்றது.
காலில் சுருக்கென்று ஏதோ ஏற வலி உயிர்போனது. குனிந்து பாதத்தை செக் செய்ய கூரான சரளை கல் செருப்பையையும் மீறி அவளின் மென்மையான பாதங்களை பதம் பார்த்திருந்து. பல்
...Enjoyed this?
Sign in to clap