
தழலை அணைக்கும் அமுதகமே...
About
வெறுப்பென அவள் புரிந்த கொண்ட பார்வையும், காதலில்லை என அவன் நம்பிய மௌனமும், இரண்டு இதயங்களுக்கு இடையே ஒரு சொல்லப்படாத காவியத்தை சிறை வைத்திருந்தது...
அவளின் பயந்த அமைதியும்,
அவனின் கோபத் தழலும், மறைத்து வைத்திருப்பது ஒரே கதையின் இரண்டு பக்கங்கள் என்பதை
அவர்கள் அறிந்தால்?
தழலென தகிக்கும் அவனை அணைக்க அமுதகமாய் அவனின் வாழ்வில் மீண்டும் வருகிறாள் அவள்...
அத்தியாயம் 01
"ஆதி... " என்ற தன் சித்தியின் குரலில் குளித்து விட்டு கண்ணாடி முன் நின்று கொண்டைப் போட்டுக் கொண்டிருந்தவளோ அவசரமாக சமையல் கட்டை நோக்கி ஓடினாள், அங்கு அவளின் சித்தியான சித்ராவோ சமைத்துக் கொண்டிருக்க, அதை பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் நுளைந்தவள் "சொல்லுங்க சித்தி, என்ன பண்ணனும்... " என்று கேட்டபடியே அவரின் அருகில் வந்து நின்றிருந்தாள்...
சித்ராவோ "இந்த காய்கறி எல்லாம் நறுக்கிட்டு, சிக்கன் குழப்பையும் பண்ணு, நான் போய் சித்தப்பாக்கு டீ கொடுத்துட்டு வாரேன்... " என்றப்படி அவர் டீ க
...Enjoyed this?
Sign in to clap