
நைட்ராக்ஸ்
About
தமிழகத்தில் நடந்த இரண்டு மர்மத் தாக்குதல்கள்! நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி! உலகத்திலேயே அடையாளம் காணப்படாத மர்மத் தோட்டாக்கள்!
இந்தத் தாக்குதல்களை நடத்தியது யார்? எதற்காக நடத்தினார்கள்? உண்மையைத் தேடி எஸ்.பி. தீரனும் இரண்டு சிபிஐ அதிகாரிகளும் ஏரியா 51 நோக்கிப் பயணிக்கிறார்கள். அங்கே அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தடயம் என்ன?
நைட்ராக்ஸ் — மர்மத்தின் தொடக்கம். உண்மையைத் தேடும் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது!
நைட்ராக்ஸ் — மர்மத்தின் தொடக்கம்
தமிழ்நாட்டில் ஒரு பெரிய பொதுப் பொருட்காட்சி களைகட்டியிருந்தது. ராட்டினங்கள் வானத்தைத் தொட்டன. விளையாட்டு அரங்குகள், உணவுக் கடைகள், வண்ண விளக்குகள் என எங்கும் மக்களின் சிரிப்பும் பேச்சும் நிறைந்திருந்தன. குடும்பங்கள் மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், திடீரெனத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
சடசடவெனத் தொடர்ந்து கேட்ட சத்தம் சில நொடிகளில் அந்த மகிழ்ச்சியைப் பயங்கரமாக மாற்றியது. மக்கள் தப்பிக்க ஓடினர். சிலர் தங்கள் குடும்பத்தினரைத் தேடி அ
...Enjoyed this?
Sign in to clap