
நீ எனதருகினில் நீ
About
இருபது ஆண்டுகளாய் உண்மையென நம்பிய வாழ்க்கை, ஒருநாள் பொய்யென்று தெரிந்தால்...
நேசித்த உறவுகளே துரோகத்தின் முகமாய் மாறினால்...
நம்பிக்கைகள் உடைந்து, நினைவுகள் காயமாகி, இதயம் தன்னையே தொலைத்துப் போனால்...
அது வெறும் வலியல்ல... வாழ்ந்த வாழ்க்கையையே மீண்டும் வாழ வேண்டிய தண்டனை!
**சில துரோகங்கள் உறவுகளைப் பிரிப்பதில்லை... ஒரு வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றன!**
நீ எனதருகினில் நீ
எழுத்து - யாழ்வி
அத்தியாயம் 1: மாய இருளின் பிடி
கண்களைத் திறக்க எவ்வளவோ முயன்றும் இமைகள் இரும்புத் தகடுகளாய் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன. தலையின் பின்புறம் ஒரு பெரும் பாறை இறங்கி நசுக்குவது போன்ற வலி நரம்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்தது. காதுகளுக்குள் நடுக்கத்தை உண்டாக்கும் ஒரு மெல்லிய ரீங்காரம்... 'விகாரமான' சத்தத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தது. மூச்சை உள்ளிழுக்கும் போதெல்லாம், நுரையீரலை அடைக்கும் அளவுக்கு ஒரு விசித்திரமான மணம் நாசியைத் துளைத்தது. அது பல நூறு ஆண்டுகள் பூ
...Enjoyed this?
Sign in to clap