
கமழுங்குளவி
About
சமூகத்தில் நடக்கும் நிஜ சம்பவமாகிய மாமியார் கொடுமையை, கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன்.
ஆதினி, திருமணத்திற்கு முன்பு கனவுகளை சுமந்த தேவதை.
முதலில் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு, பெண் பார்க்க வந்ததில் இருந்து மாறி விடுகிறாள்.
ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டு, அந்த குடும்பம் படும் அல்லல்கள் ... என்று களம் அழுத்தமாக நகரும் .
அத்தியாயம்: 1
"மணி அஞ்சாகப் போது, என்னடி இன்னும் வாய் பேசிட்டு இருக்கீங்க. போய் வாசலத் தொளிச்சி கோலத்த போட்டு விடுங்க. போங்க." என விரட்டினார் ஆனந்தி.
"கோலம் போடனுமா?. அம்மா எனக்கெல்லாம் அது வராது. நான் குளிக்கணும், மேக்கப் போடணும், புடவை கட்டணும். எவ்ளோ வேலை இருக்கு. என்னப் போய்க் கோலம் போடக் கூப்பிடுறீங்க!" என்றவள் கொண்டு வந்த துணிப் பையிலிருந்து புடவையை எடுத்து வெளியே வைத்தாள். ஆழினி.
நீலமும் ஆரஞ்சும் கலந்த அந்தப் பட்டுப் புடவைக்கு ஏற்றார் போல் வாங்கி வைத்திருந்த கவரிங் நகைகள் அடங்கிய பெ
...Enjoyed this?
Sign in to clap