
மௌனம் சொல்லும் காதல்
About
கதையைப் பற்றி,
நடிகன், பாடகனான துகிர்வண்ணனின் குரல் ஒரு விபத்தில் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தாழ்வுமனப்பான்மை வந்துவிட அறையை விட்டு வெளியே வராமல் வீட்டினுள்ளே அமர்ந்துவிடுகிறான்.
அவனை மாற்றுவதற்காகவும், நேர்த்தி வைத்தும் அவனின் பெற்றோரும், தம்பியுமாக நாயகி இருக்கும் ஊருக்கு கூட்டிவருகிறார்கள்.
நாயகியோ பிறப்பிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காதவள் அவளைக் கண்டு, அவனின் தாழ்வு மனப்பான்மை அகன்று அவளிடம் காதல் மலருகிறதா என்பதை இக்கதையில் பார்ப்போம்
மௌனம் - 1
கிழக்கே சூரியன் வருவதற்கு அடையாளமாக வானம் லேசாகச் செம்பஞ்சுக் கலவையில் சிவக்கத் தொடங்குகையில், ஆலம்பட்டியின் மொத்த கிராமமும் விழித்தெழும்பிச் சுறுசுறுப்பாகத் தங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.
அக் கிராமத்தின் ஒரு வீட்டின் இல்லத்தரசியான அமுதா அந்தக் காலையிலேயே அடுப்படியில் உலை கொதித்துக் கொண்டிருக்க, அரிசியைக் களைந்து கொண்டிருந்தார். அவரது மகன் ஆனந்தன் மின்வாரியத்தில் வேலை பார்ப்பதால் இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டும்.
கணவன் சிவநேசனோ, "வயலுக்குத் தண்ணி பாய்ச்சப் போ
...Enjoyed this?
Sign in to clap