Skip to content
மழலைக்குள் மலர்ந்த மாங்கல்யம்

மழலைக்குள் மலர்ந்த மாங்கல்யம்

0
2
SERIES•
Ongoing#Marumanam#After marriage love story

About

ஒரு குழந்தைக்காக இணைந்த இரு அந்நிய மனங்கள்... காலம் செல்லச் செல்ல ஒருவரின் உலகமாக மற்றொருவர் மாறும் அழகான பயணம். ❤️

கடமைக்காகத் தொடங்கிய உறவு, காதலாக மலருமா? அந்த மழலை அவர்களின் வாழ்க்கையில் எழுதப்போகும் மாற்றம் என்ன?

மழலைக்குள் மலர்ந்த மாங்கல்யம் — ஒரு அழகான குடும்பக் காதல் கதை! 🥹❤️

ஆட்டோ தெருமுனையில் திரும்பியபோது, மடியில் வைத்திருந்த கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள் தேனருவி.

அதே தெரு... அதே வேப்பமரம்... அதே மாரியம்மன் கோயில் மணியோசை!

மூன்று வருடங்களுக்கு முன்பு, கழுத்தில் மாலையும் முகத்தில் மஞ்சளுமாக, சிரிப்பும் வெட்கமுமாய் புகுந்த அதே வீட்டிற்கு இன்று தனியொரு பெண்ணாகத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

அன்று அவளுடைய கைகளில் திருமண வளையல்கள் சிணுங்கின. இன்று அவளுடைய மனதிற்குள் உடைந்துபோன கனவுகளின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

“இன்னும் அஞ்சு நிமிஷம்தான்மா... வந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap