
என் மழை முகிலே
About
Hey You !
Yes, You !
நீங்க தான் !
மனசைக் கசக்கிப் பிழிஞ்சு அழ வைக்காம, சீட் எட்ஜ்ல உட்கார வெச்சு டிவிஸ்ட் & டர்ன்ஸ் படிக்க வைக்காம, இயல்பா மென்மையா இருக்க ஒரு கதையைத் தேடிட்டு இருக்கீங்கன்னா, இந்தக் கதை உங்களுக்கானது.
வரவா வேண்டாமான்னு யோசிச்சிட்டு நிக்கிற மழை, மனசை நிறைக்கிற மண்வாசம், மழைக் காற்று, காதுக்குள்ள ராஜா, ரஹ்மான் பாட்டுன்னு முற்றத்தில் அமர்ந்து இருந்தா எப்படி இருக்கும்?
அப்படியொரு உணர்வைத் தர முயற்சித்திருக்கிறோம்.
உ
என் மழை முகிலே - மித்ரா பரணி
முகில் 1
பூவே.. செம்பூவே.. உன் வாசம் வரும்
வாசல்.. என் வாசல்.. உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
அகத்தினில் மென்சாமரம் வீசிடும் ஏழிசை ஏகாந்தமாய், யேசுதாசின் ஆழ்ந்த குரல் காற்றினில் கலந்து அவ்வறையில் தவழ்ந்திருக்க, அதில் கரைந்தவாறு எதிரே இருந்த கோப்பில் மூழ்கியிருந்தான் அவன்.
இசை, அவன் உயிர்த் துணை. அவன் இதயத்தில் இன்பம் சிந்திப் போகும் இதம். அதுவும் யேசுதாஸ் என்றால் அத்தனை பிடித்தம். தன் அகத்தை ஆளும் அதிகாரம் அளிக்கும் அளவுக்குப் பிடித
...Enjoyed this?
Sign in to clap