
கடைசி கணக்குகள் - A story of Timeless Man
7
13
SERIES•
Ongoing
About
பொள்ளாச்சி அருகிலுள்ள கிராமத்தில் வாழும் வங்கி குமாஸ்தா செழியன், வாழ்நாள் முழுவதும் குடும்பத்துக்காகவே வாழ்ந்து, "அடுத்த வருஷம் பார்க்கலாம்" என்று எல்லாவற்றையும் தள்ளிப் போட்டவன். வங்கியில் மயங்கி விழுந்ததும், தனக்கு இன்னும் முப்பது நாட்களே என்று அறிகிறான். அழுது கழிக்காமல் வாழ்ந்து முடிக்க முடிவு செய்து, உண்மையை மறைத்து வீடு திரும்புகிறான். “Sometime, Later may become Never” என்பதே கதையின் சாரம்.
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் அது. காலை ஆறு மணிக்கே கோயில் மணி ஒலிக்கும். அந்த மணியோசையோடு எழுந்து, அவன் சிறு வயது முதலே, ஒரே மாதிரி வாழ்ந்து வந்தவன் செழியன். வயது முப்பது. வங்கியில் குமாஸ்தா. நேரத்துக்கு எழுவான், நேரத்துக்கு உண்பான், நேரத்துக்கு உறங்குவான். "செழியா, ஒரு நாள் லீவு போட்டு எங்கயாவது போய்ட்டு வாடா" என்று நண்பர்கள் சொன்னால், "அடுத்த வருஷம் பார்க்கலாம்" என்பான். அவன் வீட்டில் அம்மா பார்வதியும் அப்பா முருகேசனும் இருந்தார்கள். அம்மா விடியற்காலையில் அவனுக்கான எல்லா வேலையும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap