Skip to content
நிழல் சுமக்கும் நிலவின் காதல்

நிழல் சுமக்கும் நிலவின் காதல்

20
5
SERIES•
Ongoing

About

தியா இறந்துவிட்டாள்… ஆனால் துருவின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள்!

அவள் சொல்வது ஒன்றே ஒன்றுதான்… “துரு… நான் தற்கொலை செய்துக்கல!”

தியாவின் தோழி வர்ஷினி காவல் ஆய்வாளராக விசாரணையில் இறங்க, ஒவ்வொரு தடயமும் ஒரு புதிய மர்மத்தைத் திறக்கிறது. தியாவைக் கொன்றது யார்? அவள் நம்பியவரா? மரணத்திற்குப் பின்னும் தொடரும் அவளது காதலின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன?

நிழல் சுமக்கும் நிலவின் காதல்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அதிகாலை 6:10. விமானத்திலிருந்து வெளியே வந்த துருவ், முதலில் செய்தது தன் கைப்பேசியை எடுத்துத் தியாவின் எண்ணை அழுத்தியதுதான். மறுமுனையில் சில நொடிகள் அழைப்பு சென்ற பிறகு, வழக்கமான இயந்திரக் குரல் ஒலித்தது. "நீங்கள் தொடர்புகொள்ள முயலும் எண் பதிலளிக்கவில்லை..." துருவ் உதட்டைப் பிதுக்கினான். நேற்றிரவு பதினொன்றரை மணிக்குக்கூட ஹோட்டல் அறையிலிருந்து அவளை அழைத்தபோது இதே பதில்தான் கிடைத்தது. அப்போது, 'தூங்கியிருப்பாள் போல' என்று நினைத்துக் கொண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap